"திராவிட மாடல்" என்பதும் "மோடியின் மாடல்" என்பதும் வேறு வேறல்ல - பெ.மணியரசன் சிறப்பு நேர்காணல் - தமிழ்த் தேசிய சித்தாத்தந்த முன்னோடி
மதுரை: தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும், தமிழ்த் தேசிய சித்தாத்தந்த முன்னோடிகளுள் ஒருவருமான பெ.மணியரசன், 'திராவிட மாடல், தமிழ் இந்து, வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம், சமூக நீதி, இலங்கை பொருளாதார நெருக்கடி, ஈழப் போராட்டம் ஆகியவை குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். இந்த சிறப்பு நேர்காணலில், அவர் வெளிநாடு மற்றும் வடநாட்டு முதலாளிகளை கொண்டு பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கும் மோடியின் மாடல்தான் திராவிட மாடல்; இரண்டும் வேறு வேறல்ல என்று தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்ற சொல்லாடலின் பொருள் என்ன? என்றும் அச்சொல் தமிழர்கள் என்ற அடையாளத்தை விட்டு செல்ல வழிவகை செய்கிறதா? என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.