Video:நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் லிஃப்டில் சிக்கிய வயதான கேரள தம்பதியினர் - பத்திரமாக மீட்பு! - கண் பரிசோதனை
கேரள மாநிலம், திருவல்லாவைச் சேர்ந்தவர், விஜிஜோன் (வயது 84). இவருடைய மனைவி மரியா மஜுன் (வயது 80). இவர்கள் இருவரும் நேற்று (மே 24) காலை பாலருவி ரயிலில் கேரளாவில் இருந்து நெல்லைக்கு வருகை தந்தனர். நெல்லையில் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்துவிட்டு நேற்று இரவு 11 மணிக்கு, அதே ரயிலில் ஊருக்குச் செல்வதற்காக இருந்துள்ளார்கள். பின்பு பாலருவி ரயில் நிற்கும் 2ஆவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக லிஃப்டில் சென்றுள்ளபோது லிஃப்ட் பழுதாகி இடையில் நின்றதால் இவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இருவரும் சத்தம் போடவே ரயில்வே போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து லிஃப்டில் மாட்டிய வயதான கேரள தம்பதிகளைப் பாதுகாப்பாக மீட்டனர்.