தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

டாஸ்மாக் கடை வேண்டும் என மதுபிரியர்கள் போராட்டம் - செங்கல்பட்டு மாவட்டம்

By

Published : Jul 8, 2022, 10:28 PM IST

செங்கல்பட்டு: இலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது சூரியங் காடு. இங்கு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று இயங்கி வந்தது. குடித்துவிட்டு குடிமகன்கள் சாலையில் குறுக்கும் நெடுகும் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதனால் தங்கள் பகுதியில் இருந்து டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அங்கிருந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து டாஸ்மாக்கை மாற்றக்கூடாது என்ற கோஷத்தோடு நான்கு ஐந்து பேர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட காட்சி காண்பவர்களை சிரிப்புக்கு உள்ளாக்கினாலும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details