தேனியில் பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் நடிகை ஓவியா
தேனி: இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட பிரபல பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளை தேனியில் துவக்கப்பட்டுள்ளது. இந்த பர்னிச்சர் நிறுவனத்தின் புதிய கிளையை பிரபல நடிகை ஓவியா ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றி வைத்தும் கடையினை திறந்து வைத்தார். நடிகை ஓவியாவை காண ஏராளமானோர் கடையில் குவிந்தனர். பின்னர் அவர்களுடன் சகஜமாக பேசிய ஓவியா அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.