ரூ.5 லட்சம் விழுந்ததாக வந்த குறுந்தகவல் லிங்கினை கிளிக் செய்த நடிகையிடம் மார்ஃபிங் படங்களை பகிர்ந்து மிரட்டிய கும்பல் - சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவன்
சின்னத்திரை நடிகை லட்சுமி வாசுதேவன், கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என்றால், அவரது செல்போனுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை விழுந்ததாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை அவர் தொட்டுள்ளார். பின்னர், அவரது செல்போனில் இருந்த அவரது புகைப்படங்களை திருடிய சைபர் திருடர்கள், மார்ஃபிங் செய்து பகிர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த மார்பிங் புகைப்படங்களை அவரது பெற்றோர், உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நடிகை தரப்பில் காவல் துறையினர் வசம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத்தெரிய வருகிறது.