செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஆராதனா சிவகார்த்திகேயன்! - 44th Chess Olympiad
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று (ஆகஸ்ட் 9) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா, குழுவினருடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.