Video... காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளைஞர்கள்... - நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
நாமக்கல்: கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடி உபரி நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளான இந்திரா நகர், மணிமேகலை வீதி, கலைமகள் வீதி மற்றும் பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 67 வீடுகளில் நீர் புகுந்தது. கடந்த 50 நாட்களில் மட்டும் மூன்று முறை காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரங்களில் இறங்கவோ குளிக்கவோ மீன்பிடிக்கவோ எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில் குமாரபாளையம் கலைமகள் வீதி பகுதியில், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் டைவ் அடிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.