Video:'தள்ளு..தள்ளு... பழுதாகி நின்ற நெடுஞ்சாலை ரோந்து வாகனம்' - மூச்சுத்திணற தள்ளிய காவலர்! - சமூக ஆர்வலர்கள் கேள்வி
விழுப்புரம்: திண்டிவனம் புறவழிச் சாலையில் நேற்று (ஜூலை2) நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பழுதானதால் அதனை காவலர் ஒருவரும் நெடுஞ்சாலையில் நடைப்பயணம் மேற்கொண்ட உள்ளூர்வாசி ஒருவரும் முன்னோக்கி தள்ளிச்சென்ற சம்பவம், நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணம் மேற்கொண்டவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதனை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலாகி வருகிறது. இதனிடையே இப்படி பழுதாகும் வாகனத்தை வைத்துக்கொண்டு ரோந்துப்பணியில் இருக்கும்போது எப்படி குற்றவாளிகளை துரத்திப்பிடிக்க இயலும் என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.