படமா எடுக்குற..? இளைஞரை துரத்திய ஒற்றை யானை... - elephant chased the youth
கோயம்புத்தூர் மாவட்டம் சின்னத்தடாகம் அருகே யானைகள் ஆனைகட்டி சாலையைக் கடந்து மருதமலை வனப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனியாக வந்த ஒற்றை ஆண் யானைக்கு அருகில் சென்று செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றார். அதனைக் கண்ட யானை, அந்த இளைஞரை துரத்திச் சென்றுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.