Video:ஆம்பூர் அருகே நிலத்தில் பிடிபட்ட 9 அடி நீள மலைப்பாம்பு - Ambur Forest Department
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், லோகநாதன். இவருக்குச்சொந்தமான நிலத்தில் இன்று ஒன்பது அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைக்கவனித்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை மீட்டு, அரங்கல்துருகம் காப்புக்காட்டில் விட்டனர்.