வீடியோ: நெல்லை அருகே திடீரென தீப்பற்றி எரிந்த லோடு ஆட்டோ - The household goods in the auto were destroyed
நெல்லை: பாண்டிச்சேரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக் கொண்டு லோடு ஆட்டோ நெல்லை அடுத்து பொன்னாக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் வரும்போது திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆட்டோவில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்தன. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர் காயம் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினார்.