Viral Video : ஆட்டோவை முட்டி எறிந்த காட்டெருமை - பத்தனம்திட்டா
பத்தனம்திட்டா(கேரளா): கேரள மாநிலம் அங்கமூழி-பிளாப்பள்ளி சாலையில் ஒரு பெரிய காட்டெருமை ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காட்டெருமை அதன் கொம்பினால் ஆட்டோவில் இருந்த ஓட்டுநருடன் சேர்த்து தூக்கி எறிய முயன்றது. ஆனால், நல்வாய்ப்பாக ஆட்டோ கவிழவில்லை. மீண்டும் அந்த காட்டெருமை ஆட்டோவைத் தாக்க முயன்றது. ஆனால், அது பின்வாங்கியது. யானையை விட காட்டெருமை மிகவும் ஆபத்தானது என அந்த வீடியோவினைப் பதிவு செய்தவர்கள் கூறுகின்றனர்.