கடலூரில் வாஷிங் மெஷினுக்குள் புகுந்த 5 அடி பாம்பு - கடலூரில் வாஷிங் மெஷினுக்குள் புகுந்த 5 அடி பாம்பு
கடலூர்: உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் மோகன், இவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் வாஷிங்மெஷினில் துணியை போடுவதற்கு தயாரான போது மிஷினுக்குள் இருந்து சத்தம் வந்தது. மிஷினுக்குள் எலி புகுந்திருப்பதாக எண்ணி மிஷினை சாய்த்து பார்க்கும்போது உள்ளே பாம்பு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து பாம்பு ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் தெரிவித்த குடும்பத்தினர் அவர் வரும் வரை காத்திருந்தனர்.வாஷிங் மெஷின் பின்பக்கத்தை கழற்றி உள்ளே பார்த்தபோது 5 அடி நீலம் உள்ள சாரை பாம்பு இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து பாம்பு பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.