44th Chess Olympiad: சென்னையில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி! - 44வது செஸ் ஒலிம்பியாட் போ
சென்னை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதும் 188 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் போட்டியில் கலந்துகொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு வேறு நாட்டில் நடத்த முடிவு செய்தபோது இந்தியா அந்த வாய்ப்பைப்பெற்றது. இந்தியாவில் முதல்முறையாக உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கிறிஸ்தவ கல்லூரி ஐஏஎப் சாலையில் இருந்து வேளச்சேரி சாலை வரை செஸ் ஒலிம்பியாட்டை பெருமைப்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் முகத்தில் செஸ் சதுரங்க வடிவில் பெயிண்டிங் செய்தும் செஸ் போர்டு வடிவமைப்பிலான கொடிகளுடனும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
TAGGED:
44வது செஸ் ஒலிம்பியாட் போ