தமிழ்நாடு

tamil nadu

வீடியோ: மயிலாடுதுறை திரௌபதி அம்மன் கோயில் 31ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

By

Published : Jul 4, 2022, 10:48 PM IST

மயிலாடுதுறை: சேந்தங்குடி ஆனந்ததாண்டவபுரம் சாலையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோயில் தேவஸ்தானத்தை சேர்ந்த பழைமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 31- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் தர்மர் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, அம்பாள் பிறப்பு, திருக்கல்யாணம், அர்ஜூனன் தபசு நாடகம், அம்பாள் பூ எடுத்தல் நாடகம், குறவஞ்சி நாடகம், கர்ண மோட்சம், அரவன் பலி, படுகளம், அம்பாள் கூந்தல் முடிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முக்கிய விழாவான தீமிதி திருவிழாவையொட்டி காப்பு கட்டி இதில் பக்தர்கள் சிலர் வாயில் 22 அடி, 25 அடி நீள அலகு குத்தி தீ மிதித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

ABOUT THE AUTHOR

...view details