காளையார்கோவில் அருகே பழமையான தங்கத்தாலான 2 குண்டுமணிகள் கண்டெடுப்பு - Archaeology
சிவகங்கை: காளைார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சி உசிலனேந்தல் கண்மாய் பகுதியில் கிடந்த முதுமக்கள் தாழி ஓடுகளை 'சிவகங்கை தொல்நடைக்குழு' உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்தபோது தங்கத்தால் ஆன 2 குண்டுமணிகள் இருப்பதை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசாவும் குண்டுமணிகளை ஆய்வு செய்ததில் அவை பழமையானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவற்றை சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத்குமார், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் ஆகியோரிடம் நேற்று (ஜூன்26) ஒப்படைத்தனர்.