மயிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் - மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
மயிலாடுதுறை நகராட்சி 32ஆவது வார்டு சின்ன எரகலி தெருவிற்குள்பட்ட வாக்குச்சாவடி மையம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டது. இங்குள்ள இரண்டாயிரத்து 375 வாக்குகளில் 439 வாக்குகள் பதிவாகியுள்ளதாக முகவர்கள் கூறிய நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 478 வாக்குகள் பதிவானதாகக் காண்பித்துள்ளன. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சோதனை செய்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 39 வாக்குகள் கூடுதலாகப் பதிவானது தெரியவந்தது. மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சில வேட்பாளர்கள் கூறியதால் மோதல் ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின் அதுவரை பதிவான வாக்குகளுடன் இயந்திரத்திற்குச் சீல்வைக்கப்பட்டு புது இயந்திரம் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு இரண்டரை மணிநேர தாமதத்திற்குப் பின் தொடங்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST