ஆவடி மாநகராட்சியில் நரிக்குறவர் இன மக்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு! - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர். திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் 26ஆவது வார்டுக்குள்பட்ட சோழம்பேடு தனியார் நடுநிலைப் பள்ளியில் குடும்பத்துடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர். இவர்களில் 268 பேர் வாக்களிக்கச் தகுதியானவர்கள் ஆவர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST