அரபிக்குத்து பாடல் ஸ்டைலில் மாஸ் காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
துபாயில் நடக்கும் (World Expo Exhibition) உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு (மார்ச்24) அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சென்ற பிறகு மு.க.ஸ்டாலின் கோட்டு சூட்டு என்று மிடுக்கான ஆடைத் தோற்றத்தில் பார்ப்பதற்கே 'அட நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சரா.. இவர்..!' என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாஸ் லுக்கில் தோற்றமளிக்கிறார். அதை மேலும், மெருகேற்றும் விதமாக அனிருத் இசையமைத்த 'அரபிக் குத்து' பாடலுக்கு ஸ்டாலின் நிகழ்வுகள் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. (ஆடியோ நன்றி: சன் பிக்சர்ஸ் குழுமம்)
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST