நெல்லை சாஃப்டர் பள்ளி 82 நாட்களுக்குப் பின் மீண்டும் திறப்பு! - பள்ளி கல்வித்துறை
நெல்லையில் கடந்த டிச.17ஆம் தேதி, சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில், அந்த பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தப்பள்ளி பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், 82 நாட்களுக்குப் பிறகு மார்ச் 9ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 6, 8, 10, 12 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை மீண்டும் அவசரமாக திறப்பதாக பாஜகவினர் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST