"பாதி சம்பவம் தான் எனக்குத் தெரியும்...": ரவுடி என்கவுன்ட்டர் விவகாரத்தில் நெல்லை சரக டிஐஜி பேட்டி - நீராவி முருகன்
தூத்துக்குடி மாவட்டம், நீராவிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று(மார்ச்.16) நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திண்டுக்கல் மாவட்ட தனிப்படை காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான காவல் துறையினர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மீனவன் குளம் என்ற பகுதியில் இனோவா காரில் சென்ற ரவுடி நீராவி முருகனை சுற்றிவளைத்து என்கவுன்ட்டர் செய்தனர். அப்போது ரவுடி நீராவி முருகன் காவலர்களை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட காவலர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் காயமடைந்த காவலர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர் வெளியே வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST