பாஜகவால் பட்டியலினத்தவர் ஆக்கிரமிக்கப்படுவதை விட மாட்டேன் - திருமா பேச்சு - மதுரை மாநகராட்சி 30ஆவது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரா மோகனாவிற்கு ஆதரவாக திருமாவளவன் பரப்புரை
சனாதான சக்திகளை முறியடிக்கத் தான் திமுக கூட்டணியோடு உள்ளோம், இந்தியர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் எனவும், இந்துக்களைச் சாதி ரீதியாகப் பிரித்தால்தான் இந்துவாக இருக்கவைத்து வாக்குகளைப் பெற முடியும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் திட்டம். காமராஜரைக் கொலை செய்ய முயன்ற இயக்கம் ஆர்எஸ்எஸ்தான். அப்படிப்பட்ட இயக்கத்தின் அரசியல் பிரிவான பாஜகவில் தலித்துகள் இணைவது மிகப்பெரிய ஆபத்து. தலித்துகளுக்கு எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் தலித்துகளை ஆக்கிரமிப்பதை விடமாட்டேன் என மதுரை மாநகராட்சி 30ஆவது வார்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரா. மோகனாவிற்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST