குழந்தை மீது வேனை ஏற்றிய ஓட்டுநர் - சிசிடிவி காட்சி - குழந்தை மீது வேனை ஏற்றிய ஓட்டுநர்
மகாராஷ்டிராவில் ரஹிசா சால் என்ற இடத்திற்கு மார்பிள் கற்கள் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது. வேனின் முன்பு அப்பகுதியை சேர்ந்த மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அறியாத ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார். அப்போது வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு வயதான அர்சலம் ஷா என்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மார்ச் 24ஆம் தேதி நடந்த இந்த விபத்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST