திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தெப்பத் திருவிழா - திருவெண்காடு புதன் பகவான்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் சுவேதாரண்யேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் 12ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று (பிப்ரவரி 24) வெகு விமரிசையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST