மேகதாது விவகாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் மார்ச் 24இல் போராட்டம் அறிவிப்பு - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை
தர்மபுரியில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஏ. சின்னசாமி, "ஒகேனக்கல் பகுதியில் இருந்து காவிரி உபரி நீரை, நீரேற்றுத் திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு நிரப்பி மாவட்டத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கர்நாடகாவின் மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு துளி நீர் கூட கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். ஆகவே, இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 24ஆம் தேதி ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
mekedatu issue