'வேளாண் பட்ஜெட் பன்முகத்தன்மை கொண்டது' - தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் வரவேற்பு - தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர்ஆர்.பாண்டியன் பேட்டி
திருவாரூர்: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தோடு அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பன்முகத்தன்மை கொண்ட பட்ஜெட்டாக வெளிவந்துள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்டதாக உள்ளது. அதேநேரம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவது குறித்த அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST