சிவன் மீது படும் சூரிய ஒளி... அதிசய நிகழ்வைக் காண குவியும் பக்தர்கள் - சிவன் மீது விழும் சூரிய ஒளி
வேலூர்: காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இந்தாண்டு பங்குனி உத்திராயனத்தில் பங்குனி மாதம் 23 முதல் சித்திரை 1 வரை சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுகிறது. சிவன் மீது சூரியஒளி படும் இந்த அதிசய நிகழ்வு காலை 6:15 மணி முதல் 6.45 வரை நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த அதிசயத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருவர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST