15 நிமிடம்... 5 யோகாசனம்... ஆணி படுக்கையின் மீது அசத்திய இளைஞர் - கள்ளக்குறிச்சியில் கரோனா விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக ஜெயப்பிரகாஷ் (27) என்பவர் 2 ஆயிரத்து 555 ஆணிகள் கொண்ட படுக்கையில் படுத்து உலக சாதனை முயற்சியாக யோகாசனம் செய்தார். சுமார் 15 நிமிடங்கள் ஆணிப்படுக்கையில் படுத்து ஐந்த ஆசனங்களை செய்த இவர், பொதுமக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.