ஊரடங்கை மீறி கிரிக்கெட் - ட்ரோன் கேமராவில் சிக்கிய இளைஞர்கள்! - கரோனா ஊரடங்கு
மதுரை: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் காவல்துறை அலுவலர்கள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டனர். உடனே காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு குறித்து எடுத்துரைத்ததோடு, ஊரடங்கு முடியும் வரை பொது இடங்களில் விளையாட மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.