தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு!

By

Published : Sep 11, 2019, 11:23 PM IST

நாகை: கீழ்வேளூர் அடுத்துள்ள மூலப்படுகை கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் ராஜேஷ். இவர், அப்பகுதி வெட்டாறு கரையில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 10 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி ராஜேஷை சடலமாக மீட்டனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த நாகூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details