வெற்றி... வெற்றி... வெற்றி! வாகைசூடிய வீரத்தமிழச்சி யோகதர்ஷினி - YOGADHARSHINI won price in Chettipalayam jallikattu compatition
கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த வீரத்தமிழச்சி யோகதர்ஷினியின் காளை வெற்றிபெற்றது. உதயநிதி சார்பில் யோகதர்ஷினிக்கு தங்கக் காசு, பல பரிசுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். முன்னதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இவரது காளை வெற்றிபெறாத நிலையில் சிறப்புப் பரிசு வழங்க அமைச்சர் மூர்த்தி முன்வந்து அழைத்தும் யோகதர்ஷினி பரிசு பெற மறுத்துவிட்டார்.