100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி முள் படுக்கையில் அமர்ந்தவாறு யோகாசனம்! - Yoga Awareness
திருவண்ணாமலை: வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி, முள் படுக்கையில் அமர்ந்து யோகா செய்யும் வித்தியாச விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிரிவலப்பாதையில் உள்ள 'கிரியா யோகி பாபா' ஆஸ்ரமத்தில் நடைபெற்றது. இதில், வாக்காளர்கள் அனைவரும் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் வருகின்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சுற்றுசூழல் பாதுகாப்பு, விவசாயம் செழிப்படையவும் ஓம்கார சிவதாச பகவான் கருவேல முல் படுக்கையின் மேல் தியான நிலையில் அமர்ந்து 20 நிமிடங்கள் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டார்.