வாணியம்பாடியில் மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம் - thirupattur latest news
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மகளிர் காவல்நிலையங்களுக்கு வரும் பெண்கள் அவர் தம் குழந்தைகளுடன் வரும் சூழல் இருப்பதால் அவர்களின் குழந்தைகளுக்காக மனமகிழ் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனமகிழ் கூடத்தை மாவடட் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள், மாவட்ட குழந்தைகள் நிறுவனங்களைச் சார்ந்த தனி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.