மாரியாத்தா சொல்றேன் ஊசி வேணாம் - செவிலியரை சாமி ஆடி துரத்திய மூதாட்டி - மாரியாத்தா சொல்றேன் ஊசி வேணாம்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு கரோனா தடுப்பூசி செலுத்த செவிலியர் சென்றனர். அப்போது வயதான தம்பதியை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்தனர். முதலில் அவர்கள் தடுப்பூசி வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டனர். திடீரென ஆவேசமடைந்த மூதாட்டி சாமி ஆடத் தொடங்கினார். 'மாரியாத்தா சொல்றேன், அங்காளம்மா சொல்றேன் ஊசி வேண்டாம்' என மூதாட்டி கூறினார். உடனே செவிலியர் அங்கிருந்து கிளம்பினர்.