ஆரல்வாய்மொழி அருகே மின்னல் தாக்கி காற்றாலையில் தீ! - windmill in aralvaimozhi
கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில், நேற்று(நவ. 03) இரவு மின்னல் தாக்கியதில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலை ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அதையடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அது குறித்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.