நீட் விவகாரத்தில் காலக்கெடுவை நிர்ணயிக்க சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்த எம்.பி.வில்சன்! - நீட் விவகாரம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, கடந்த மூன்று மாதங்களாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களின் மீது ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, காலக்கெடுவை நிர்ணயிக்கும் வகையில் அரசியலமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்.பி.வில்சன் கொண்டு வந்து நிறைவேற்றினார்.