சிதிலமடைந்துவரும் திருவாரூர் அரசு நூலகம் - காப்பாற்றுமா தமிழ்நாடு அரசு? - tamilnadu government
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள தேளிகுளம் பிள்ளையார் கோயில் தெருவில் 22 வருடங்களாக இயங்கி வரும் லியோ கே.ஜி.மாணிக்கம் நினைவு அரசு நூலகம், தற்போது பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பல அரசு அலுவலர்களை உருவாக்கியுள்ள இந்த பழமை வாய்ந்த நூலகத்துக்குப் புத்துயிர் கொடுத்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு வரும் வாசகர்களின் கோரிக்கையாக உள்ளது.