அமிர்தி கொட்டாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்! - கொட்டாறு அருவி
வேலூர்: வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது அமிர்தி- கொட்டாறு அருவி. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஜவ்வாது மலைத்தொடரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கொட்டாறு அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையை ஒட்டி இருக்கும் தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாகநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கரையை ஒட்டியுள்ள விளைநிலங்களிலும் நீர் தேங்கியுள்ளது.