ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் - கிராம மக்களுக்கு எச்சரிக்கை - ஊருக்குள் புகுந்த யானைகள்
கோயம்புத்தூர் மாவட்டம் நரசிபுரம் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நேற்று (அக்.29) அதிகாலை இரண்டு ஆண் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. நெருக்கடியான வீதியில் இரண்டு யானைகள் உலா வருவது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் எனவும் வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.