கோவையில் நாய்களை துரத்தும் காட்டுயானைகள்: சிசிடிவி வைரல்
கோவை: துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிகளில் இன்று அதிகாலை ஆறு யானைகள் கொண்ட காட்டுயானை கூட்டம் உலா வந்துள்ளது. யானைகள் கூட்டத்தைக் கண்ட தெரு நாய்கள் குரைத்துள்ளன. இதனால் கோபமடைந்த காட்டுயானைகள் நாய்களைத் துரத்தின. இக்காட்சிகள் அப்பகுதி வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவிவருகிறது.