கரும்புக்காக காத்து நிற்கும் ஒற்றை ஆண் யானை - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தனியார் ஆலைக்கு சில நாட்களுக்கு முன்பு கரும்புகளை ஏற்றி வந்த லாரி காராப்பள்ளம் சோதனைச் சாவடி தடுப்பு கம்பியில் சிக்கியது. அச்சமயம் அங்கு வந்த ஒற்றை ஆண் யானை கரும்புகளை தின்றது. தற்போது அந்த யானை, அதே இடத்தில் தினமும் வந்து நின்று கரும்புக்காக காத்து நிற்கிறது.