ஒகேனக்கல் காட்டுப் பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை! - ஒகேனக்கல் சுற்றுலா
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சாலையில் காட்டு யானைகள் வழக்கமாகச் சாலையை கடந்து ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்துவருவது வழக்கம். பென்னாகரம் ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும் சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம் அருகே காட்டு யானை ஒன்று முகாமிட்டு சுற்றித் திரிவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிவதால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.