40 அடி கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு - கிணற்றில் விழுந்த காட்டெருமை
திண்டுக்கல்: நத்தம் அருகே புன்னமலை வனப்பகுதியில் காட்டெருமை ஒன்று 40 அடி கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு காட்டெருமையை உயிருடன் மீட்டனர்.