திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (அக்டோபர் 22) மாலை கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.