நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி! - nilgiris latest news
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம், மைசூருவில் உள்ள இந்திய கடற்படை இடையே நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகள் பரிமாறும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மைசூரு கப்பல் படை ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் தலைவர் பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங் ஆகியோர் கலந்து கொண்டு நினைவு பரிசினை பறிமாறிக்கொண்டனர்.