ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு! - அணையில் தண்ணீர் திறப்பு
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆழியார் அணை வேகமாக நிரம்பிவருகிறது. அணையின் மொத்த உயரமான 120 அடியில், தற்போது 117 அடியை எட்டிவுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி ஐந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.