ஆங்காங்கு குடிநீர் குழாய்கள் உடைபடுவதால் தண்ணீர் வீணாகும் அவலம்! - cavery drinking water pipes breakdown
புதுக்கோட்டை: விராலிமலை சாலையில் அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி என்னும் இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிலிருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வயலில் பாய்ந்து அந்த இடம் குளம்போல் காட்சி அளிக்கின்றது. இதே போன்று அன்னவாசல் பல்லூரணி அருகே உள்ள பகுதியிலும் காவிரி நீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியாகி வருவதாகவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.