விபத்துக்குள்ளான டேங்கர் லாரி: குடம், கேன்களில் வேஸ்ட் ஆயில் நிரப்பிச் சென்ற மக்கள் - lorry accident news
விழுப்புரம்: திருவாரூர் மாவட்டம், ஆணை குப்பம் பகுதியைச் சேர்ந்த கேசவன் (27). இவர் தூத்துக்குடியிலிருந்து சென்னை செங்குன்றத்திற்கு 35 ஆயிரம் லிட்டர் வேஸ்ட் ஆயிலை டேங்கர் லாரியில் ஏற்றிச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டேங்கர் லாரி சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், லாரியில் இருந்த வேஸ்ட் ஆயில் அனைத்தும் சாலையில் வழிந்து ஓடியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் குடம், கேன்களில் அதனை பிடித்துச் சென்றனர்.