ரங்கோலி வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு - தர்மபுரி அண்மைச் செய்திகள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரங்கோலி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோலமிட்டனர். சிறந்த கோலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா பரிசுகள் வழங்கினார்.