அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய குவிந்த தொண்டர்கள் - tamilnadu latest news
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 3) கடைசி நாள் என்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ராயப்பேட்டை, அண்ணாசாலை, கிண்டி உள்ளிட்டப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.